அண்ணாமலை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அடாவடி - கே.பி.ராமலிங்கம் மீது புகார்.!
complaint against kp ramalingam
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ளார். அப்போது அவருக்கு சால்வை போடுவதற்காக நின்ற நிர்வாகியிடம் இருந்து கே.பி.ராமலிங்கம் சால்வையை பறித்துள்ளார்.
இதனால் அவர் கீழே விழ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியில் ஈடுபட்ட காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல், மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
complaint against kp ramalingam