பரவனாற்றில் ரசாயன கழிவு நீரை "NLC நிறுவனம்" கலப்பதாக பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


நெய்வேலி பரவனாற்றில் என்எல்சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார்.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தேங்க கூடிய கழிவு தண்ணீரை சுத்திகரிக்காமல் அப்படியே கரி கலந்து பரவனாற்றில் ராட்சத குழாய்கள் மூலம் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த பரவனாற்றை நம்பி கடலூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்கம்-2ல் இருந்து சுத்திகரிக்கப்படாமல் நீரை அப்படியே கருப்பு நிறத்தில் பரவனாற்றில் திறந்து விடப்படுவது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

இந்த நீர் விவசாயம் நிலங்களில் பாசனத்திற்காக பாய்சப்படுவதால் நிலம் முழுவதும் நிலக்கரி துகள்கள் படிந்து  விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோன்று விலங்குகளுக்கம் இந்த நீர் பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும், மனிதர்களுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint against NLC for mixing waste water in Paravalar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->