பிரதமர் அலுவலகம் வரை சென்ற புகார்! அப்படி என்ன செய்தார் டிடிஎஃப் வாசன்!!
Complaint against ttf vasan
யூடியூப் பிரபலமாகவும் பைக் ரேசராகவும் சோசியல் மீடியாவில் பிரபலமானவர்
டிடிஎஃப் வாசன். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் ஆபத்தான முறையில் காஞ்சிபுரம் அருகே மோட்டார் பைக்கை வீலிங் செய்தபோது எதிர்ப்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
இது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி முக்கிய ஆதாரமாக காவல்துறையிடம் சிக்கியது. இவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் ஸ்டேஷனனில் குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் போன்ற பிரிவுகள் உட்பட மொத்தம் 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இவருக்கு பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்டது .
இந்த விசாரணையின் போது, ஒருகட்டத்தில் நீதிபதியே கோபமடைந்து,. டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாக எச்சரித்ததுடன், ஜாமீனையம் நிராகரித்தார்.
மேலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப்பிறகு டிடிஎஃப் நீதிமன்றம் வாசனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பைக் சைலென்சர்களை இவரது மெக்கானிக் கடையில் விற்பனை செய்ததாக புர்கார் அளித்தததை தொடர்ந்து, இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டிடிஎஃப் வாசன் நடத்தி வரும் மெக்கானிக் கடைக்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தினர்.
English Summary
Complaint against ttf vasan