நீலகிரியில் முழு கடையடைப்பு... வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி....! - Seithipunal
Seithipunal


ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு இந்திய முப்படை தளபதியான பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 14 பேர் ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

அவர்கள் தரையிறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் நஞ்சப்பசத்திரம் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல் இறுதிசடங்குகள் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்தை ஓட்டி இன்று மாவட்டம் முழுவதும் கடையடைப்பு செய்யப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Complete closure of shops in the Nilgiris to pay homage to 13 people, including Bibin Rawat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->