கோஷ்டி மோதலில் ஈடுபட்ட காங்கிரஸார் - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பரபரப்பு.!
congrass party fight in cpm candidate intro meeting at dindukal
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில், திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மதுரை மக்களவைத் தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிபிஎம் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்டோருடன் வேட்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் சச்சிதானந்தம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
பின்னர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது குறித்து, கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதன் படி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத் தலைவர் மாரிக்கண்ணு பங்கேற்று மேடையில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முத்துவிஜயன், நகர் மன்ற உறுப்பினர்கள் பத்மினி முருகானந்தம், மகாலட்சுமி மாசிலாமணி உள்ளிட்டோர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாரிக்கண்ணுவை பேச அனுமதிக்கக்கூடாது என்று முழக்கமிட்டனர். அங்கிருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
congrass party fight in cpm candidate intro meeting at dindukal