பேசுங்க மோடி! ஆனா.. இதை பற்றியம் கொஞ்சம் பேசுங்க மோடி - காங்கிரஸ் தாக்கு! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற்ற மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி எவ்வித பிரச்சனைகள் குறித்தும் பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி, மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் மக்களிடையே உரையாற்றி வருகிறார். மக்களவை தேர்தலின் போது மன் கி பாத் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருந்ததை அடுத்து, தற்போது பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், இன்று 111-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த மக்களவை தேர்தலில் 65 கோடி பேர் வாக்களித்தது குறித்தும் பெருமிதமடைந்தார். 

இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தெரிவித்திருப்பதாவது, இந்நிகழ்ச்சியில், நீட் தேர்வு குறித்தோ, தினசரி உள்கட்டமைப்பு சரிவுகள் குறித்தோ ரயில் விபத்து குறித்தோ பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. டெல்லி விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை.

அனைவரும் நீட் மோசடிகள் பற்றி பேசி வருவதால் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக இவர் கேரளாவில் இருந்து குடை பற்றி பேசுகிறார். மக்கள் நலன் கருதி எவ்வித பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசவில்லை.

பிரதமர் பிரச்சாரத்தில் பேச வேண்டியதை மக்களின் நிகழ்ச்சியில் பேசி கொண்டிருக்கிறார். தேர்தலின் போது நீங்கள் தெற்கிற்கு எதிராக வடக்கே போட்டியிட்டதை மக்கள் மறந்து விட மாட்டார்கள்". என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தெரிவித்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Condemn to PM Modi june 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->