சட்டத்திற்கு புறம்பான என்கவுன்டர் - கொலைகளுக்கு சமமானவை - திமுக கூட்டணி எம்பி கடும் கண்டனம்!
Congress MP Karthik Chidambaram Condemn to Thiruvengadam Encounter
கடந்த 5 ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.
இதில், திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.
இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிய திருவேங்கடம், வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.
உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை நோக்கி தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியாகினர். இந்த என்கவுண்டர் சமபத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், "சட்டத்திற்கு புறம்பான என்கவுன்டர் கொலைகள் தமிழ்நாடு காவல்துறைக்கு அழகல்ல; இது போன்ற சம்பவங்கள் ஒப்பந்த சீருடை கொலைகளுக்கு சமமானவை” என்று, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பி இருப்பதாகவும், கொலை வழக்கு தொடர்பான உண்மையை மறைக்க திமுக முயற்சி செய்வதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களும் இந்த என்கவுண்டர் சம்பவத்தின் பின்னணி குறித்து சந்தேகம் எழுப்பி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress MP Karthik Chidambaram Condemn to Thiruvengadam Encounter