தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டும் - முழக்கமிட்ட கார்த்திக் சிதம்பரம்!  - Seithipunal
Seithipunal


இலங்கை ஈழ இனப்படுகொலை காரணமாக கடந்த 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. இந்த தேர்தலின்போது திமுகவை காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து, அரசியல் செய்து வந்தன. 

பின்னர் தொடர் தோல்வி காரணமாக, இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதன் பலனாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தல், 2019 மக்களவை பொதுத் தேர்தல்களில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

தேர்தலில் இந்த கூட்டணி வெற்றியை பதிவு செய்தாலும், கூட்டணியில் திமுகவிற்கு சரியான மரியாதை கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது வருகிறது. மேலும் திமுகவின் அமைச்சரவையில் இடம்பெறுவது மற்றும் அதிக தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த பிரச்சனைகள் அவ்வப்போது தேர்தல் சமயத்தில் எழுந்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு அமைய உள்ள புதிய தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டும். கூட்டணியால் நாம் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் நாம் எதையும் தட்டிக் கேட்காமல் நிற்க கூடாது என்று, சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம் பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் உள்ளரங்கு ஆலோசனை கூட்டங்களில் திமுகவிற்கு வார்னிங் கொடுப்பதுபோல் பேசுவதும், பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூட்டணி உடைய வாய்ப்பில்லை, திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது, நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று மாறி மாறி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Karthik Chidambaram Sat About TN Cabinet 2026


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->