பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பாக நாளை மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கும்செல்வபெருந்தகை மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress protest announced for petrol price hike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->