தலித்துகளெல்லாம் ரௌடிகள்: பல்டி அடித்த செல்வப்பெருந்தகை - பாஜக தரப்பில் கடும்கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே வார்த்தை போல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில்,

"தந்தி தொலைக்காட்சியின் நேர்காணலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள்  'தலித்துகளெல்லாம் 'ரௌடிகள், History Sheeterகள் ' என்று அண்ணாமலை சொன்னார் என்று சொன்ன போது, தந்தி தொலைக்காட்சியின் ஹரிஹரன் அவர்கள், எப்போது சொன்னார், அவர் உங்களை தானே சொன்னார், நீங்கள் ஏன் 'தலித்' கார்டை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று அவரை கிடுக்கி பிடி போட்டு கேட்டார்.

அப்போது, தான் அப்படி சொல்லவேயில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பல்டி அடித்தது, தமிழக அரசியல் எந்த அளவிற்கு ஜாதி அடிப்படையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. 

ஒரு குற்றச்சாட்டை சொன்னால், அதுவும் பொது வெளியில் உள்ள ஒரு குற்றச்சாட்டை தைரியமாக அண்ணாமலை அவர்கள் கூறியதற்கு தன் ஜாதியின் பெயரால் அரசியல்  எதிர்வினையாற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மேலும், அந்த நேர்காணலில் கூட பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியதோடு, உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளது, அரசியல் சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதை உணர்த்துகிறது. 

இதுவரை ஜாதியை குறிப்பிட்டு பேசுபவர்கள் யாரையும் எந்த அரசியல்வாதியும் கண்டிக்க முன்வர மறுப்பது தான் காலத்தின் கொடுமை. ஜாதியை ஒழித்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள் ஜாதிய ரீதியாக தான் அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது எச்சரிக்கை மணி" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress SelvaPerunthagai vs BJP Annamalai Issue july


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->