திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார்: நடந்தது என்ன?
Congress suddenly road blockade
தேசிய கொடியை ஏற்ற அனுமதி மறுத்த போலீசாரை கண்டிக்கும் வகையில் ஆலங்குளத்தில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி, ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே குடியரசு நாளையொட்டி தேசிய கொடியை ஏற்ற காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருடம் தோறும் இதே இடத்தில் தேசிய கொடியை ஏற்றப்பட்டு வந்த நிலையில் உரிய அனுமதி பெறவில்லை என தெரிவித்த போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொடி கம்பத்தை மீண்டும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலை முன்பு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், ஓ பி சி அணி மாநில நிர்வாகி, தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
Congress suddenly road blockade