மாநிலக் கல்விக் கொள்கை குறித்து.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை.!
Consultation on state education policy today under the chairmanship of Tamil Nadu Chief Minister MK Stalin
மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
English Summary
Consultation on state education policy today under the chairmanship of Tamil Nadu Chief Minister MK Stalin