மீண்டும் நெல்லி தோப்பு தொகுதியில் போட்டியா? தொகுதி மக்களுக்கு வாரி வழங்கும் முன்னாள் MLA ஓம்சக்தி சேகர்!
Contesting in Nellithoppu constituency again? Former MLA Omsakthi Shekhar
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நெல்லி தோப்பு தொகுதி மக்களுக்கு முன்னாள் MLA ஓம்சக்தி சேகர் தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்கினார்.
நெல்லி தோப்புசட்டமன்றதொகுதியைசேர்ந்தஅனைத்து(10,000)குடும்பங்களுக்கும் நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் உரிமை மீட்பு குழு மாநில செயளாலர்.திரு.ஓம்சக்தி சேகர் அவர்கள் தனது சொந்த செலவில் தமிழ் புத்தாண்டு பரிசு வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா குயவர்பாளையம் பகத்சிங் வீதியில் கிருஷ்ணர் கோவில் அருகே நடைபெற்றது.
திரு.ஓம்சக்தி சேகர் அவர்கள் கலந்துகொண்டு பொது மக்கள் அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தமிழ் புத்தாண்டு பரிசினை வழங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பரிசினை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அனைவரும் திரு ஓம் சக்தி சேகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இன்று முதல் ஒவ்வொரு பகுதியாக திரு.ஓம்சக்தி சேகர்அவர்களே நேரடியாக சென்று அந்தந்த பகுதி மக்களுக்கு பரிசினை வழங்க உள்ளார்.
முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், சுபதேவ்சங்கர், ஆர் வி ஆர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சேகர்,தம்பா, ஜெயராஜ், குப்புசாமி உடையார்,வரதராஜ், வெண்ணிலா சண்முகம், ராஜசேகர், லாண்டரிகுமார், ஆனந்த ஜோதி, முனியன், முனி ரத்தனம், நவீனா ரவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Contesting in Nellithoppu constituency again? Former MLA Omsakthi Shekhar