கொரோனா கவச உடைய அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களில் 2,472 பேருக்கு பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரியும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் தமிழக முழுவதும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் இன்றுடன் 11வது நாளை எட்டியுள்ள நிலையில் சென்னை எழும்பூரில் கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Contract nurses protest wearing corona shield dress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->