அய்யா வீரமணி மீது கை வைத்தால் கையை வெட்டுவேன்.. திமுக எம்பி டி.ஆர் பாலு பேச்சால் சர்ச்சை..!!
Controversy over DMK MP DR Balu speech in Madurai
திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள் எம்பிக்கள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே நடந்து கொள்ளும் விதம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நடந்த திறந்தவெளி மாநாட்டில் பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு தனது கட்சி தலைவரை சீண்டினாலோ ஐயா வீரமணி மீது கை வைத்தாலோ கையை வெட்டுவேன் என பேசிய விவகாரம் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.
அந்த மாநாட்டில் பேசிய டி.ஆர் பாலு ''ராமர் பாலம் என்பது ஒரு கட்டுக்கதை. சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தவே இதுபோன்று கட்டுக்கதைகளை பேசி வருகின்றனர். இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியவர்கள் எல்லோரும் பாவிகள்.
யாராவது உங்களை சீண்டினால் உங்களால் திருப்பி அடிக்க முடியாது, ஆனால் என்னால் முடியும். ஏனென்றால் உங்களுக்கு பலம் கிடையாது, ஆனால் எனக்கு பலம் உண்டு, அதனால் நான் திருப்பி அடிப்பேன். என் கட்சித் தலைவரை சீண்டினாலோ, எவனாவது ஒருவன் அய்யா வீரமணி மீது கை வைத்தாலோ அவன் கையை வெட்டுவேன். இதுதான் என்னுடைய தர்மம். அவன் கையை வெட்டுவது எனது நியாயம். ஞாயம் இல்லை என நீங்கள் சொல்லலாம். அதை நீதிமன்றத்திற்கு போய் சொல்லுங்கள்.
ஆனால் அதற்கு முன்பு அவன் கையை வெட்டி விடுவேன். நீங்கள் எல்லாம் முறைப்பது பார்த்தால் நாளைக்கே போட்டுக் கொடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. அவரை நாவடுக்கத்துடன் பேச சொல்லுங்கள் என சொல்வீர்கள். சொன்னால் சொல்லிக் கொள்ளுங்கள்" என அலட்சியமாக பேசியுள்ளார். திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
English Summary
Controversy over DMK MP DR Balu speech in Madurai