அது முற்றுலும் பொய்!! "யாரும் நம்ப வேண்டாம்".!! கோரண்மடல் தரப்பு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் உர உற்பத்தி ஆலையிலிருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கோரமண்டல் நிறுவனம் மீண்டும் இயக்கப்பட்டதாக வெளியான செய்தியால் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "கோரமண்டல் ஆலையை மீண்டும் தொடங்க அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. நாங்கள் ஆலையை மீண்டு இயக்கவில்லை என்பதையும், தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி ஆய்வு நடைமுறையை பின்பற்றி வருகிறோம் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் உரம் உற்பத்தி பிரிவு தலைவர் அமீர் ஆல்வி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coromandel explain plant was not restarted


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->