தென்காசி : மக்கள் நலத்திட்டங்களை செய்ய வந்தால் கொலை மிரட்டல் விடுகிறார்கள்.! ஆட்சியர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மனு.!! - Seithipunal
Seithipunal


மக்கள் நலத்திட்டங்களை செய்ய வந்தால் கொலை மிரட்டல் விடுகிறார்கள்.! ஆட்சியர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மனு.!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட களப்பாகுளம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக இருக்கும் சந்திரன் என்பவரும், அவருடன் சேர்ந்து அதே ஊராட்சியில் கவுன்சிலராக உள்ள மற்ற எட்டு உறுப்பினர்களும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், "தங்களது ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் சிவசங்கரி என்பவர், தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எந்தவொரு மக்கள் நலப் பணிகளையும் நிறைவேற்றுவதற்கு முன்வருவதில்லை. 

தாங்கள் ஏதாவது மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருவது குறித்து புகார் அளித்தால் தங்களை ஆள் வைத்து கொலை மிரட்டல் விடுகிறார். எனவே, ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள சிவசங்கரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், களப்பாகுளம் ஊராட்சியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால்  பதவிகளை ராஜினாமா செய்வோம்" என்றுத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவினைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக மனு மீதான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை ஏற்பதாக உறுதி அளித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

counsilars pettition to collector in tenkasi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->