லட்ச கணக்கில் சிக்கிய கள்ளநோட்டு! முக்கிய குற்றவாளியை கைது செய்த போலீசார்! - Seithipunal
Seithipunal


தேனி, குமுளி அருகே உள்ள தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ள நோட்டு செலுத்தப்பட்டது தெரியவந்து, இது குறித்து பீர்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வண்டிபெரியாறு பகுதியைச் சேர்ந்த சபின் ஜேக்கப் என்பவர் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய போது ரூ. 22,000 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அன்னக்கரையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மற்றும் சென்னையில் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். 

இவர்களிடம் ரூ. 20.000 கொடுத்து ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் சபின் ஜேக்கப், ராஜேஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். 

மேலும் இவர்களுக்கு கள்ள நோட்டு சப்ளை செய்த சுப்பிரமணியன் என்பவரை சென்னை தமிழக போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.45 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு எந்திரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக வண்டிபெரியாறு போலீசார் சுப்ரமணியை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Counterfeit notes caught police arrested guilty


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->