பேருந்து நிலையத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி - கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போன சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றது. இதனால் அங்குள்ள பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதுமட்டுமல்லாமல், வெளியூர் செல்லும் பயணிகளின் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில் நேற்றிரவு இந்த பேருந்து நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று அங்குள்ள கழிவறையின் பின்புறமாக சென்று யாரும் இல்லாத நேரத்தில் இளைஞர் அவசர அவசரமாக தனது காதலிக்கு தாலி கட்டிவிட்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். 

இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது.

இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்து நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அந்த காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காதல் ஜோடி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடந்து வரும் நிலையில், தற்போது பேருந்து நிலையத்திலேயே தாலி கட்டி திருமணம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple married in ambur bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->