சேலம் : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி - விசாரணையில் வெளிவந்த பகீர்.!
couples sucide attempt in salem collecter office
சேலம் மாவட்டத்தில் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா. இவரது மனைவி சந்தியா. இவர்கள் இருவரும் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலைப் பிடுங்கி அவர்களை அமைதிப்படுத்தி ஓரமாக அழைத்து வந்து அமர வைத்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது சந்தியா தெரிவித்ததாவது, "நான் அம்மாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.
அப்போது தன்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் மூன்று பேர் என்னிடம் கடன் கேட்டனர். அதன் பின்னர் நான் கடனாக பெற்று அவர்களுக்கு ரூ.7 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப தரவில்லை.
மீண்டும் அவர்களிடம் பணம் தருமாறு கேட்ட போது, அவர்கள் பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதன் காரணமாக நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டோம்" என்று அவர் தெரிவித்தார். அந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
English Summary
couples sucide attempt in salem collecter office