மாடு முட்டினால் சேதாரம் வந்தே பாரத் ரெயிலுக்கு தான்!!! - எம்.பி சு. வெங்கடேசன்
cow goes railway only Bharat Railway suffer damage MP S Venkatesan
ரெயில்வே பாதுகாப்பு அறிக்கையில், வந்தே பாரத் ரெயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், வந்தே பாரத் ரெயிலின் முன் பகுதி இலகுவாக இருப்பதால் மாடுகள் மோதினால் விபத்துக்கு வழிவகுக்கும் எனவும், மாடுகள் செல்லும் இடங்களை கண்டறிந்து சுரங்கப் பாதைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டள்ளது.
இந்த சூழலில், இந்த அறிக்கை தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
எம்.பி. சு. வெங்கடேசன்:
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம். வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை.வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cow goes railway only Bharat Railway suffer damage MP S Venkatesan