மாட்டை பலியிட்டு புதைத்த காங்கிரஸ் பிரமுகர்.? திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகே ராஜா முகமது என்பவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டை கடந்த 2018 -ல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். இதனை மணிகண்டன் என்பவர் வாடகைக்கு எடுத்து பராமரித்து வந்துள்ளார். 

கொரோனா லாக் டவுன்க்கு பின் சரியாக வாடகை கொடுக்கவில்லை என்பதால் ராஜா முகமது மணிகண்டனிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இது வாக்குவாதமாக மாறியது. 

இருவரும் மாறி மாறி திட்டிக் கொண்டபோது காங்கிரஸ் கட்சி பிரமுகரான மணிகண்டன், "மாந்திரீகம் செய்து இங்கே பசுவை பலியிட்டு புதைத்து இருப்பதாகவும் அதுபோல உன்னையும் கொன்று புதைத்து விடுவேன்." என்றும் ராஜா முகமதுவை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா முகமது உடனடியாக திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு சென்று மணிகண்டன் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் மிருக வதை தடுப்புச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நாளை மாடு புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பிரேதப் பரிசோதனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cow killed in dindukkal congress office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->