எடப்பாடி பழனிச்சாமிக்கு விழுந்த அடி - திமுக கூட்டணி கட்சி தலைவர் சொன்ன செய்தி!  - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். மேலும் அவர் 67757 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். திமுக எதிர்பார்த்ததை விட கூடுதலாக 17000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 56,296 வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் இந்த தேர்தலில் திமுக, பாமகவை தவிர, நாம் தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கையில், திமுக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வெற்றியாக விக்கிரவாண்டி தேர்தல் அமைந்துள்ளது. 

விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றி. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து எழ முடியாத அதிமுக, போட்டியிலிருந்து பின்வாங்கி உள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவிக்கையில், இடைத்தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணியின் கொள்கை பலத்திற்கான வெற்றி. இந்த வெற்றிக்கு அரசின் நலத்திட்டங்களை காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமிக்கு விழுந்த அடி என்றும், திமுக கூட்டணிக்கு மகத்தான எதிர்காலம் உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவு உணர்த்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த தேர்தல் முடிவு குறித்து தெரிவிக்கையில், இடைத்தேர்தல் முடிவு தமிழக மக்களின் தற்போதைய மனநிலை கிடையாது. இந்த தேர்தல் முடிவு ஒரு சார்பாக இருக்கக் கூடாது என்று நினைத்தோம்.

இந்த இடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு இல்லை. இந்த இடைத்தேர்தல் முடிவை நம்பி 2026 இல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Balakrishnan say about ADMK and by election reslut


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->