காலையிலேயே சென்னையை பதறவைத்த ஏகே 47 துப்பாக்கி யாருடையது தெரியுமா? விசாரணையில் அம்பலமான உண்மை!
CRPF AK47 Chennai Ramapuram
சென்னை ராமாபுரம் சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனை சிக்னல் அருகே துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிடந்ததை கண்ட சிவராஜ் என்பவர், அவற்றை மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இந்த துப்பாக்கி யாருடையது மற்றும் அது எவ்வாறு இங்கு வந்தது என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், துப்பாக்கி ஒரு CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) வீரருக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணிக்காக செல்லும் வழியில், ஆவடி பகுதியைச் சேர்ந்த அந்த CRPF காவலர் துப்பாக்கியை தவறுதலாக கீழே போட்டுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, உரிய ஆவணங்களை சரிபார்த்த போலீசார், குறித்த CRPF காவலரிடம் துப்பாக்கியை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
CRPF AK47 Chennai Ramapuram