பரபரப்பு.. கிரிப்டோ கரன்சியில் "100 கோடி ரூபாய் வரை மோசடி"..!! முதலீட்டாளர்கள் போராட்டம்..!!
Crypto currency investors protest in Tiruvallur
திருவள்ளூர் மாவட்டம் வானகரம் அருகே மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கிரிப்டோ கரன்சி முதலீடு செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி முதலீட்டை ஈர்த்து உள்ளார்.
இந்த அறிவிப்பை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த சந்திரசேகர் கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் சந்திரசேகர் இல்லத்தின் மின் இணைப்பை துண்டித்ததுடன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சந்திரசேகரனை கைது செய்த காவல்துறையினர் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Crypto currency investors protest in Tiruvallur