கிரிப்டோ கரன்சி மோசடி...பல கோடிகளை சுருட்டிய வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்!
Cryptocurrency scam Police arrest man for stealing crores of rupees
"ஹாஷ்பே" என்ற இணையதளத்தை உருவாக்கி, கிரிப்டோ கரன்சியில் 2 கோடியே 60 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் பல மடங்கு லாபத்தை தருகிறோம் என்று சொல்லி புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து அந்த பணத்தை அவர்களால் எடுக்க முடியாமலும் அவர்களுக்கு போட்ட பணம் கூட கிடைக்க முடியாமல் கிரிப்டோ கரன்சியாக கூட வாங்க முடியாமல் பணத்தை நட்டப்படுத்தி விட்டார்கள் என்று கொடுத்த புகார் சம்பந்தமாக இணைய வழி காவல் துறை காவல் ஆய்வாளர் திரு.கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
வழக்கின் விசாரணையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. நாரா சைதன்யா IPS, SSP (C&I) அவர்களின் வழிகாட்டுதல்களும் கிரிப்டோ கரன்சி சம்பந்தமான அறிவுரைகளையும் பின்பற்றி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் அவர்களின் ஆலோசனின் படி விசாரணை மேற்கொண்டதில் மேற்கொண்ட மோசடி கும்பல் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு 2024 ஆம் ஆண்டு சினிமா நடிகைகளை கொண்டு மிக பிரம்மாண்டமாக துவக்க விழாவை நடத்தி மூன்று மாதங்களுக்கு பிறகு 100
நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசுகளை வழங்கி மேலும் மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை வைத்து பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது.
மேற்படி கிரிப்டோ கரன்சி எந்த விதமான கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு புதுச்சேரியை சேர்ந்த அனைவருக்கும் தெரிய வந்தது .மேலும் டிசி எக்ஸ் என்ற ஒரு காயினை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி இவர்களாக உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியை புதுச்சேரி நபர்களுக்கு அனுப்பி அந்த டிசிஎஸ் காயினை விற்க முடியாமலும் அல்லது பழையபடி பணமாக மாற்ற முடியாமலும் குழம்பி இருந்த நிலையில் மேற்படி Hashpe என்கிற பிளாட்பார்மை காணாமல் போகச் செய்து அனைவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதில் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் 3.6 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி சம்பந்தமாக புகார் விசாரணையில் உள்ளது மேற்படி மோசடி கும்பல் மீது டெல்லி ஒரிசா மகாராஷ்டிரா மும்பை கோயமுத்தூர் பெங்களூர் பாண்டிச்சேரி ஆந்திர பிரதேஷ் கேரளா விழுப்புரம் திருப்பூர் போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்ததும் இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அக்கவுண்டை வாங்கி கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை இணையவழி மோசடிக்காரர்கள் திருட இவர்கள் உடந்தையாக இருந்ததும் இரண்டு வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
மேற்கண்ட கோயம்புத்தூர் மோசடி கும்பல் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் மீது புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே வழக்கு சம்பந்தமாக மேற்படி குற்றவாளிகள் இம்ரான் பாஷா ராய்ப்பூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல் படி பல்வேறு இணைய வழி யுக்திகளையும் புதுச்சேரி காவல் நிலையத்தில் இருக்கின்ற புதிய வகை நுண் பொருட்களை வைத்து மேற்படி நபர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசாரணையின் அடிப்படையில் கடந்த 26.2.2025 அன்று ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி பாலாஜி தலைமையிலான தனிப் படை போலீஸ் சார், கோயமுத்தூரில் வைத்து நித்தீஷ் ஜெயின் மற்றும் அரவிந்த் என்ற இரண்டு நபர்களை கைது செய்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வந்தனர். இணையதளத்தை உருவாக்கிய குற்றவாளி தாமோதரன் கர்நாடகா தும்கூர் பகுதியில் மறைந்திருந்ததை கண்டுபிடித்து, போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, தாமோதரன் "ஹாஷ்பே" என்ற இணையதளத்தை உருவாக்கி, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்காக முதலீட்டின் லாபங்களை காட்டி அவர்களை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து மூன்று தொலைபேசிகள் ஒரு லேப்டாப் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. நாரா சைதன்யா IPS, SSP (C&I) அவர்கள் பொதுமக்களுக்கு இணைய வழி குற்றம் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் கூறியுள்ளார்:
• குறுகிய காலத்தில் அதிக லாபம் வழங்குவதாக கூறி முதலீடு செய்யுங்கள் என்று கூறினால் அதை நம்ப வேண்டாம்.
whatsapp telegram போன்ற சமூக வலைய தளங்கள் குழுக்களில் கூறும் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் அறிவுரைகளை நம்பாதீர்கள். அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள்
• குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி அழைப்புகளோ, குறுஞ்செய்தியோ உங்கள் தொலைபேசியில் வந்தால் அதை நம்ப வேண்டாம். அவர்கள் உங்களை ஏமாற்றி பணத்தை திருடி விடுவார்கள்
மேலும், சைபர் குற்றம் தொடர்பான சந்தேகங்களோ அல்லது ஆன்லைன் மோசடியில் பணம் இழந்திருந்தால் உடனடியாக இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலைய இலவச தொலைபேசி எண்:1930, இணையதளம்: cybercrime.gov.in, தொலைபேசி எண்: 04132276144/9489205246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
English Summary
Cryptocurrency scam Police arrest man for stealing crores of rupees