பழனி முருகன் கோயில்: சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TN Assembly minister sekar babu Palani temple
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் கிருஷ்ணசாமி, தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யபட்டது போல, பங்குனி உத்திரத்திற்கும் இதே போன்று இலவச தரிசனம் ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திர விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் மார்ச் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும், பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பங்குனி உத்திரத்தைக் கொண்டாடும் 10 நாட்களுக்குள், பழனியில் தினமும் 20,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பங்குனி உற்சவத்தை முன்னிட்டு அவரது தொகுதியில் இருந்து சென்னிமலை வழியாகப் பக்தர்கள் பெருமளவில் பயணிக்கின்றனர். ஆனால் அங்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் மக்கள் செல்ல முடியாமல் உள்ளனர்; எனவே, இன்று மற்றும் நாளை அந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் ஆட்சியருடன் ஆலோசித்து, இரு நாட்களுக்கு சாலை பணிகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.
English Summary
TN Assembly minister sekar babu Palani temple