உ.பி: 19 வயது இளம்பெண்ணை கடத்தி, 23 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை! நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்!
Uttar Pradesh gang Harassment case Drugs gang
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி லால்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், (பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் பெயர், அடையாளங்கள் மறைக்கப்படும்) கடந்த மாதம் 29ஆம் தேதி தனது தோழியை சந்திக்கப் போவதாக கூறி வீட்டைவிட்டுச் சென்றார்.
அதன் பிறகு வீடு திரும்பாமல் இருந்ததால், அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 4ஆம் தேதி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அன்றைய தினமே பாண்டேபூர் பகுதியில் போதைப் பிரமைக்குள் தவித்த அந்த பெண் மீட்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர், தனக்கு நடந்த கொடூரத்தை கூறி கதறி அழுதுள்ளார்.
தோழியை சந்திக்கச் சென்றபோது சந்தித்த பழக்கமான நண்பர் ஒருவர், கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார்.
அதன்பிறகு நடேசர் பகுதியில் விட்டு செல்லப்பட்ட அவரை, அங்கிருந்த ஐவர் கொண்ட கும்பல் ஓட்டலுக்கு அழைத்து சென்று போதைப்பொருள் கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதே ஓட்டலுக்கு மறுநாள் வந்த மூவர் மேலும் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், மற்ற சிலர் போதைப் பொருள் கலந்த நூடுல்ஸ் கொடுத்து, காட்டுப் பகுதியில் விட்டு தப்பியுள்ளனர்.
போதை இறங்கியபின் தோழி வீட்டுக்குச் சென்ற அந்த பெண், மொத்தம் 7 நாட்களில் 23 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியதைக் கேட்டு, பெற்றோர் அதிர்ந்து போனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 18 வயதுக்கு குறைவானவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
English Summary
Uttar Pradesh gang Harassment case Drugs gang