பு. கோட்டை || பெற்றக் குழந்தையை தண்ணீர் பேரலில் அமுக்கி கொன்ற தாய் - விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்.!!
mother kill her baby in putukottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் அருகே கண்ணங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன்-லாவண்யா தம்பதியினர். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், குழந்தைக்கும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் காண்பித்து வந்ததுள்ளனர்.
இதன் காரணமாக லாவண்யா குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 6-ந் தேதி இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் லாவண்யா கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்து கொண்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் லாவண்யா கத்திக் கூச்சலிட்டதால் ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டைச் சுற்றி தேடி பார்த்ததில் வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் குழந்தை உயிரிகந்த நிலையில், கிடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் லாவண்யா குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது:- "கணவர் என் மீது அன்பாக இல்லாமல் குழந்தை மீது அதிக பாசம் காட்டி வந்ததனால் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் அமுக்கி கொலை செய்து விட்டேன். 7 பவுன் தாலி சங்கிலியை வீட்டில் மறைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mother kill her baby in putukottai