கடலூர் | அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் ஆலயம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

கடலூர், விருத்தாச்சலம் அருகே சேலத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகளை 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Government bus overturned accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->