அடுத்த என்கவுண்டர்! கடலூர் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: கொள்ளை கும்பல் தலைவன் "விஜய்" போலீசாரால் சுட்டுக்கொலை!
Cuddalore Lorry drivers attacked money robbery case police Encounter
விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஒரே இரவில் மூன்று வேறு இடங்களில் மர்மநபர்கள் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி, பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய விஜய் என்பவர் தற்போது போலீசாரின் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எம். புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் பைக்குகளில் வந்த மர்மநபர்கள், லாரி ஓட்டுநர்களை வழிமறித்து தாக்கிய பின்னர், அவர்களிடம் இருந்த பணம், செல்போன்களை பறித்ததோடு, ஜி-பே பாஸ்வேர்டையும் விசாரணை செய்து பணத்தையும் திருடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் புகார் அளித்த நிலையில், சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் தற்போது போலீசாரின் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள விஜய் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Cuddalore Lorry drivers attacked money robbery case police Encounter