கடலூர் | நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்! ஒடிசா ரயில் விபத்தை கண் முன் நிறுத்திய கொடூரம்!  - Seithipunal
Seithipunal



கடலூர் : மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் துர்கா, சுகம் என்றதனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர விபத்தில், இரு பேருந்துகளும் நிலைகுலைந்து, 4 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

துர்கா என்ற தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த துர்கா பேருந்து, எதிரே வந்த சுகம் என்ற தனியார் பேருந்து மீது அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி உள்ளது.

இந்த இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள், காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், படுகாயமடைந்த 80 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தை முதலில் பார்த்த பொது மக்கள் ஒடிசா ரயில் விபத்தின் கோர காட்சிகளை கண்முன் பார்த்தது போல் இருந்ததாக சொல்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Melpattampakkam Bus Accident info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->