கடலூர்: இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன் பலி!
Cuddalore veppur accident
விருத்தாச்சலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் ஆகாஷ் (வயது 16) மற்றும் பெரிய நெசலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன் சஷின் (வயது 16) இருவரும் விருத்தாசலத்தில் உள்ள தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிக்கு செல்லும் நோக்கில் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.
வாகனத்தை ஆகாஷ் இயக்க. சஷின் பின்னால் அமர்ந்து சென்றார். இருவரும் வேப்பூரிலிருந்து பயணித்தபோது, கண்டப்பன்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே காலையில் சுமார் 9 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாய்ந்தது.
இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஷின் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய வாகனத்தை மற்றும் அதனை ஓட்டியவரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Cuddalore veppur accident