தமிழகத்தில் நிலவும் சிக்கல் : ஒரு பக்கம் அட்டவணை!...மறுபக்கம் தடை!....என்ன நடக்கப் போகிறது? - Seithipunal
Seithipunal


சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில்,  மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நேற்று முன்தினம் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், நேற்று விசாரணைக்கு வர இருந்தது. 

இந்த வழக்கை இன்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்த நிலையில்,  தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்கிறது.இதற்கிடையே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  பார்முலா 4 கார் பந்தயத்திற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Current problem in Tamil Nadu What is going to happen One page table! Ban on the other side


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->