வழக்கறிஞர் அரிவாள் வெட்டு!...பின்னனியில் இருந்த தம்பதி அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நேற்று  நீதிமன்றத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது, நீதிமன்றத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், உடன் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

மருத்துவமனையில் தற்போது வழக்கறிஞர் கண்ணன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆனந்த குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இது தொடர்பாக போலீசார்  மேற்கொண்ட விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனுக்கும், ஆனந்தகுமாரின் மனைவியான வழக்கறிஞர் சத்யாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும், கண்ணன் தொடர்ந்து தகராறு செய்ததால் ஆனந்தகுமார் அவரை  அரிவாளால்  சரமாரியாக வெட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், ஆனந்தன் மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி  சத்யாவை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cut the lawyer sickle the couple who was behind was arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->