அதிமுக vs திமுக..!! "குறையாத மகப்பேறு உயிரிழப்பு".. சட்டப்பேரவையில் 'அனல்' பறந்த விவாதம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வு துறை  மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் "கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒரு லட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக குறைக்கப்பட்டது. தற்போது அது 54 ஆக நீடித்து வருவது வருத்தமளிக்கிறது" தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் "கொரோனா பெருந்தொற்று காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது 52.3 ஆக உள்ளது" என கூறினார். தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் "கொரோனா பெருந்தொற்று தான் காரணம் என்றால், கேரளாவில் இறப்பு விகிதம் 19 ஆகவும், ஆந்திராவில் 45 ஆகவும், தெலங்கானாவில் 43 ஆகவும் இருப்பது எப்படி பெருந்தொற்று எல்லா மாநிலங்களிலும் தானே இருந்தது" என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் "அதிமுக ஆட்சியில் ஏதோ 16 ஆக இருந்ததை போலவும், தற்போது 52 ஆக இருப்பதை போல விஜயபாஸ்கர் பேசுகிறார்ர" என காட்டமாக பதில் அளித்தார். மீண்டும் பேசிய விஜயபாஸ்கர் "அதிமுக ஆட்சி காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 4000 பேர் வீதம் மொத்தம் 33 ஆயிரத்து 223 பேர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்டனர். திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்" என சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் "மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1,021 மருத்துவ இடங்களுக்கு 25 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான ஆன்லைன் தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது" என பதிலளித்தார். இந்த விவாதத்தின் போது சட்டப்பேரவையில் அனல் பறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Debate between DMK and AIADMK in TNAssembly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->