கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் முறையில் ஒரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகை அமைதி மற்றும் நல்லெண்ணெத்தை கொண்டுள்ளது.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி பொது விடுமுறையும், அதற்கு முதல் நாளான டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 11ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

December 24 and 25 holiday to kanniyakumari district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->