அடுத்தடுத்து அதிர்ச்சி - திருவண்ணாமலை தீபமலை குகை சுவர் இடிந்து விழுந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

இந்த மழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வ.ஊ.சி நகரில் வீட்டின் மீது நேற்று பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. 

இதில், 7 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அங்கு மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. இதற்கிடையே, மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் இல்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepamalai cave wall collapse in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->