ஹவுஸ்புல் ஆன வந்தே பாரத் ரயில் - தெறிக்கவிடும் தீபாவளி, பொங்கல் டிக்கெட் விற்பனை.! - Seithipunal
Seithipunal


ஹவுஸ்புல் ஆன வந்தே பாரத் ரயில் - தெறிக்கவிடும் தீபாவளி, பொங்கல் டிக்கெட் விற்பனை.!

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 24-ம் தேதி தொடங்கி வைத்தார். 

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு பிற ரயில்கள் செல்ல 12 மணி நேரம் ஆகிறது. ஆனால், வந்தே பாரத் ரயில் ஏழு மணி நேரத்தில் செல்வதால் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கான பயணசீட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நவம்பர் 12 மற்றும் ஜனவரி 12,13 உள்ளிட்ட தேதிகளுக்கான பயணசீட்டு விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. 

அதே சமயம் பயண சீட்டின் விலை அதிகமாக உள்ளதால் அனைவராலும் பயணிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் பயணசீட்டின் விலையைக் குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepavali and pongal tickets sales on vande barath train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->