அவதூறு வழக்கு: கைதான அடுத்த நாளே விடுவிக்கப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி.!
Defamation case ADMK executive released
ராணிப்பேட்டை, சோளிங்கர் நகர அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாலாஜி வெள்ளைச்சாமி மீது, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க அரசை சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியதாக இணையதளம் மூலம் சென்னை சைபர் கிரைம் பிரிவில் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாலாஜியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் எங்கு அழைத்து செல்லப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படவில்லை என்று அ.தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி பாலாஜியை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Defamation case ADMK executive released