ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! ஆளும் திமுக தரப்பில் பந்த்!  - Seithipunal
Seithipunal


கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், வரும் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

இன்று தஞ்சாவூரில் நடந்த அனைத்து கட்சி, அமைப்புகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் ஒற்றுமையை எடுத்துரைப்பது  குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில்  திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவிக்கையில், "கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.

எனவே, எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்க, கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அக்.11-ம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delta Farmers strike announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->