நாங்குநேரி சம்பவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட தேதி மாற்றம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாங்குநேரி சம்பவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட தேதி மாற்றம் - நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் சாதி பாகுபாடு காரணமாக பள்ளி மாணவர் சின்னத்துரை மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், அரசியல் காட்சிகள் என்று அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாக்குதலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் 21 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி பள்ளி மாணவர்கள் சின்னத்துரை - சந்திராசெல்வி ஆகியோரின் மீது நடத்தப்பட்ட சாதிய கொலைவெறி தாக்குதலை கண்டித்து ஆகஸ்ட் 21ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திருநெல்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், சனநாயக சக்திகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கவும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

demonstration date change against nanguneri incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->