ஜூலை 6ம் தேதி ஆர்ப்பாட்டம்! மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக அதிரடி காட்டும் கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் ஜூலை 6ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியார்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தேயிலை பறிக்கும் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது.

எந்த காரணத்தைக் கொண்டும் அவர்களை மலையில் இருந்து கீழே இறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஆணைகளை தொழிலாளர் நலத்துறையினர் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும்.

99 ஆண்டுகளாக மாஞ்சோலை மக்கள் காடுகளையும், வன செல்வங்களையும் பாதுகாத்து வருகின்றனர். மாஞ்சோலை விவகாரத்தில் கலெக்டர் நேரடியாக அங்கு சென்று விசாரணை நடத்த வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும். தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்க கூடாது.

அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை  6ம் தேதி திருநெல்வேலி ரயில் நிலையத்தின் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இவ்வாறு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Demonstration on 6th July in support of Mancholai tea plantation workers krishnaswamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->