முத்துராமலிங்க தேவர் குருபூஜை கொண்டாடுபவர்களுக்கு.. வெளியானது முக்கிய அறிவிப்பு.!
devar gurupoojai function 2022
ஒவ்வொரு வருடமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலை அமைந்துள்ள இடத்தில் குருபூஜை விழா நடைபெறும்.
ஆன்மீகப் பற்றும், தேசப்பற்றும் கொண்டவராக முத்துராமலிங்க தேவர் விளங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது அவர் அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டு இருந்தார். சுபாஷ் சந்திரபோசுடன் சேர்ந்து நாட்டின் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஆங்கிலேயர்களின் வாய் பூட்டு சட்டம் உள்ளிட்டவற்றால் முத்துராமலிங்க தேவர் பல இன்னல்களை சந்தித்தவர். அவர் அக்டோபர் 30 1963ல் மறைந்தார். இந்த நாளை அவரது ஜெயந்தி விழாவாகவு,ம் குருபூஜை தினமாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்நிலையில் இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் வரும் அக்டோபர் 21 மாலை 5 : 45 க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டேம் வர்கீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
devar gurupoojai function 2022