கோடை விடுமுறை - திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம்.!
devotees croud increase in thiruchenthur subramaniya swami temple
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் திருவிழா மற்றும் சில முக்கிய நாட்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வார விடுமுறை என்பதாலும், இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என்று அனைத்து வழிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
devotees croud increase in thiruchenthur subramaniya swami temple