திடீரென குவிந்த பக்தர்கள் - நாமக்கல் நரசிம்மர் கோவிலில் பரபரப்பு
devotees yoga in namakkal narasimmar temple
நாமக்கல்லில் உள்ள நரசிம்மர் கோவிலில் இன்று சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஒன்று கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார்கள். இந்தச் சம்பவத்தால் கோயில்களின் நிர்வாகிகள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக பக்தர்களிடம் விசாரித்தபோது, சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் நாமக்கல் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.
ஜோதிடரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியது. இதனால் பொதுமக்கள் இன்று காலையிலேயே திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
devotees yoga in namakkal narasimmar temple