தமிழகத்தில் குற்றங்கள் இல்லை.. ஆனால் எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழக டிஜிபி சைந்தபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் "கடந்த 2022 ஆம் ஆண்டு பொருத்தவரை தமிழக காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் மிகப் பெரிய அளவில் குற்றங்களோ அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை. வகுப்புவாதம் அல்லது சாதி மோதல், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு போன்ற பெரிய பிரச்சனைகள் எதுவும் நடைபெறவில்லை. 

அதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் போட்டி, ஜல்லிக்கட்டு, திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா, விநாயகர் சதுர்த்தி, மதுரை சித்திரை திருவிழா, இமானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,949 ரௌடிகள் குண்டர் சத்தத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தமிழக முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 9,906 வழக்குகள் பதியப்பட்டு 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 4,141 வங்கி கணக்குகள் முறுக்கப்பட்டுள்ளன. 

முதல்வர் திட்டத்தின் கீழ் 1,500 காவலர்களின் குறைகள் தீர்க்கப்பட்டது. அதோடு பணியின் போது உயிரிழந்த 1,132 காவலர்களின் வாரிசுகளுக்கு கருணையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆண், பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு தான் காரணம். மேலும் காவல்துறையினரின் பணிகளில் வரும் காலங்களில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய மற்றும் காவல் பணியில் தொழில் சார்ந்த உயர்ந்த தரத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என தனது சுற்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DGP Sylendrababu has sent a circular to all DSP


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->