திண்டுக்கல்லில் பதற்றத்தை ஏற்படுத்திய பட்டதாரி ஆசிரியர்! நடந்தது என்ன?
dindigul graduate teachers federation protest
திண்டுக்கல், கல்லறை தோட்டம் அருகே தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தென் மண்டலம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும். நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியரின் பதவி உயர்வுக்கு அரசாணை வெளியிட வேண்டும்.
தொடக்க கல்வி துறையில் வட்டார முன்னுரிமை வழங்கும் முறையை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட தலைவர், மதுரை மாவட்ட தலைவர், தேனி மாவட்ட தலைவர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
dindigul graduate teachers federation protest