ஜி-பே வசதியுடன் ஜோராக நடக்கும் மது விற்பனை: அள்ளிச்செல்லும் குடிமகன்கள்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், செம்பட்டி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 டாஸ்மாக் மது கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் மதுபான பார்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் 24 மணி நேரமும் மதுபான விற்பனை தொடர்ந்து இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள சிலர் மதுபானங்களை விற்பனை செய்தனர். 

விடுமுறைக்கு முதல் நாளே டாஸ்மாக் மது கடைகளில் மொத்தமாக மதுபாடல்களை வாங்கி நேற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். 

மதுபானங்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஜி-பெ மூலம் பணம் செலுத்தும் வசதியுடன் மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அரசு உத்தரவை மீறி செம்பட்டி-நிலக்கோட்டை சாலையின் ஓரம் மது விற்பனை நடை பெற்றதால் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. 

இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

எனவே இது போன்ற மதுவிற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Liquor Sale with G Pay Facility


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->