இரட்டைக்குழந்தையை பெற்ற தாய் 20 நாளில் தற்கொலை! பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், பெரியகோட்டை கிராமத்தை ச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 25) இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி கவுரி (வயது 22) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கவுரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. 

இந்நிலையில் கணவன்-மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று காலையில் அதேபோல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு விட்டு சிவகுமார் வெளியே சென்று விட்டார். 

இதனால் மனமுடைந்த கவுரி இரட்டை குழந்தைகளை விட்டு விட்டு அருகே இருந்த ஒரு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

குழந்தைகள் இரண்டு பேரும் அழுது கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து வந்து பார்த்தபோது கவுரி காணவில்லை. 

இதனால் அவரை தேடி பார்த்துள்ளனர். அப்போது கிணற்றில் கவுரி பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்க பாக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கவுரியின் உடலை மீட்டு இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இது தொடர்பான விசாரணை ஆர்.டி.ஓ இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாய் இறந்த நிலையில் இரட்டைக் குழந்தைகள் பசியால் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும் அவல நிலையை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul twins birth Mother commits suicide 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->